உயிரே உனக்காக அத்தியாயம் 11

“ஏங்க, ஏங்க ! நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா?” என்றாள் விசாலம்.

“சொல்லு”

“இல்லை  எனக்கு ஒரு யோசனை, நாமளும் நம்ம பையனுக்கு பொண்ணு பார்க்கிறோம்.”

“அதான் தெரியுமே! நீ என்ன  சொல்ல வந்தே அதை சொல்லு”

“சுகன்யாவும் இந்த வருஷம்  படிப்பை முடிச்சுடுவா, நாம ஏன் மகேஷுக்கு சுகன்யாவை பார்க்ககூடாது. அவனுக்கும் முறைப்பொண்ணு தானே?”

விசாலத்தை கூர்ந்து பார்த்த சுந்தரம் ” விசாலம் இத்தனை வருஷத்தில உன் மண்டைக்குள்ளயும் மூளைன்னு ஒன்னு இருக்குன்னு இப்போதான்  எனக்கு தெரியுது. அது சரி நாம கேட்கலாம், ஆனா அவ  இன்னும் படிப்பை முடிக்கலை, அதுவுமில்லாமல் அவ அவங்களுக்கு ஒரே பொண்ணு என்ன சொல்வாங்க, சம்மதிப்பாங்களா?”

“உங்க தங்கச்சி தானே! நீங்க கேட்டுப்பாருங்க. நான் நாளைக்கே கல்யாணம் பண்ணனும்னு சொல்லலை, பேசுவோம் சம்மதம்னா  நிச்சயம் பண்ணிக்குவோம் அவ படிப்பை முடிச்சதும் கல்யாணத்தை வைச்சுக்குவோம்.”

“சரி இவ்வளவு தூரம் நீ சொல்றே நாளைக்கு கயல்கிட்ட பேசிப்பார்ப்போம்”

மறுநாள் காலை அனைவரும் குளித்துவிட்டு  கோயிலுக்கு  சென்றனர். சனிக்கிழமையானாலும் கூட்டம் அதிகமாகவேயிருந்தது. மீனாட்சி மற்றும் சுந்தரேசுவரர் தரிசனம் முடித்து குளக்கரை பிராகாரத்தில் அமர்ந்தனர். முன்னாட்களில் கோயில் என்பது மக்களின் சமூக வாழ்க்கையில் ஒரு பெரும் பங்கு வகித்தது. திருமணம், சேமிப்பு முதலியவற்றுக்கு கோயிலின் பங்கு அதிகம். இப்பொழுதெல்லாம் கோயிலுக்கு போவதென்றால் அதற்கு காரணம் வேண்டியுள்ளது.

தொலைபேசி  ஒலித்தது ” ஹலோ அப்பா நான் சுகன்யா பேசறேன். எனக்கு கேம்பஸ் இன்டர்வியுவில வேலை கிடைச்சுடுச்சு. மகேஷ்  வேலை பார்க்கிறாரே  அதே கம்பெனியில் தான். முதல் வருஷம் trainee, ரெண்டாவது வருஷத்திலயிருந்து சாப்ட்வேர் இஞ்சினியர். அம்மா இருக்காங்களா?”

“ரொம்ப சந்தோஷம் மா, இதோ கொடுக்கிறேன் ”

“சுகன்யா தான் பேசறா! அவளுக்கு மகேஷ் வேலை பார்க்கிற கம்பெனியில் தான் வேலை கிடைச்சிருக்காம்.”

சுந்தரமும் விசாலமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கு இது ஒரு நல்ல நிமித்தமாக தோன்றியது. “ரொம்ப சந்தோஷம்”

சுந்தரம் மெதுவாக பேச்சை  தொடங்கினார் ” உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒன்னு கேட்கணும். நாங்க கேட்டது உங்களுக்கு இஷ்டமில்லைனா கோவிச்சுக்காதீங்க, இதனால நம்ம உறவுல எந்த பாதிப்பும் வரக்கூடாது.”

“அண்ணே! எனக்கு இருக்கிற ஒரே சொந்தமே நீங்கதான், நீங்க போயி இப்படியெல்லாம் பேசிக்கிட்டு, எதுவாயிருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்”

“அது நம்ம மகேஷுக்கு சுகன்யாவைக்க பார்க்கலாம்ன்னு”

“இதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம் நீங்க கேட்கறதுல தப்பு எதுவுமில்லை, ஆனா நாங்க இதுல எதுவும் முடிவெடுக்க முடியாது. மகேஷ் ஜாதகம் கொடுங்க நாங்க பொருந்தி வந்தா சுகன்யாகிட்ட பேசறோம். நீங்களும் மகேஷ்கிட்ட பேசுங்க ரெண்டு பேருக்கும்  சம்மதம்னா தாராளமாக  செய்யலாம்.” மகிழ்ச்சியுடன் மகேஷின் போட்டோ மற்றும் ஜாதகத்தை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

****************

நித்யா பழையபடி தன் ஆபிஸிற்கு செல்லத்துவங்கினாள். அன்று திங்கட்கிழமை  மகேஷ் மனச்சோர்வுடன் காணப்பட்டான்.

“டேய் மகேஷ் என்னடா வாரத்தில் முதல்  நாள் நீ என்னடான்னா ஃபியூஸ் போன பல்பு மாதிரியிருக்கே?”

“இல்லை சிவா நித்யா பழையபடி அவங்க ஆபீசுக்கு போயிட்டாங்களாம் அவங்க friend சொன்னாங்க, என்னமோ ஒரு மாதிரியாயிருக்குடா”

“டேய் பார்த்து! இது ஏதோ வேறமாதிரி போறாப்போலயிருக்கு.”

“அப்படியெல்லாம் எதுவுமில்லை நான் நித்யாகிட்ட போன்ல பேசிட்டு வரேன் நீ போ”

“ஹலோ நித்யா என்ன உங்க ஆபீஸிற்கு போயிட்டீங்களாமே சொல்லவேயில்லை”

“சார் போன் பண்ணி சீக்கிரமாக வரச்சொன்னாரு. இன்னைக்கு அவர் ஹைதராபாத் போகிறார்.அதான் உங்களுக்கு கால் பண்ண முடியலை. ஈவினிங் எங்க ஆபிஸ்கிட்ட மீட் பண்ணலாமா, உங்ககிட்ட பேசணும்.”

“சரி மீட் பண்ணலாம், ஓகே நித்யா”

மாலையில் நித்யாவின் ஆபிஸிற்கு சென்றான் மகேஷ். ” அவங்க வந்துட்டு போனதுக்கப்புறம் என்னோடு கன்ஃப்யூஷன் அதிகமாயிடுச்சு மகேஷ்.”

“என்ன நித்யா பையனை உங்களுக்கு பிடிக்கலையா? இல்லை வேற ஏதாவது பிரச்சினையா?”

“இல்லை மகேஷ் அவர் ரொம்ப சிம்பிளாத்தான் இருக்காரு நல்லா பேசினார். நான் சொன்ன என்னோடு கன்டீஷனுக்கெல்லாம் சம்மதிச்சாரு”

“அப்புறம் என்ன நித்யா அவர் உங்களைவிட படிப்புல குறைவுன்னு நினைக்கறீங்களா, இல்லை அவர. வேலை எதாவது பிராப்ளமா?”

” ஆமாம் மகேஷ் நாளைக்கு  எதாவது கோபத்தில்  எங்களுக்குள்ள என்னோடு படிப்போ வேலையோ ஒரு பிரச்சினையாக வந்தா என்ன செய்ய, அதுமட்டுமில்லாமல்  எனக்கு இன்னும் படிக்க ஆசை, என்னோடு அப்பா அம்மா என்கூட இருக்கணும்.”

“இதுக்கு ஒரே வழிதான் நித்யா உங்க அப்பா அம்மாகிட்ட பேசுங்க அப்புறமா அவரோடவும் அவங்க குடும்பத்தோடவும் பேசி சம்மதமான்னு தெரிஞ்சுக்கோங்க. நான் வேணா உங்க அப்பாகிட்ட பேசட்டுமா?”

மௌனமாக அவன் முகத்தையும் கண்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள் நித்யா. அதுவரை அவள் சந்தித்த ஆண்களில் பலர் பழகிய  சில நாட்களில்  காதல் என்றும் காமம் என்றும் பேசினார்கள். ஆனால் தன்னை  பெண் பார்த்து சென்றதை தெரிந்த பின்பும் எந்த ஒரு கள்ளங்கபடமில்லாமல் கண்ணியமாக பழகும் மகேஷ் அவளது கண்களுக்கு புதுவிதமாக தெரிந்தான்.

நட்புக்கும் காதலுக்கும் ஒரு மெல்லிய நூலிழைதான் வித்தியாசம். இரண்டும் தேவையென்றால்  உயிர் கொடுக்கும். நட்பா? காதலா? காத்திருப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s